இந்தியாவை மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக மாற்றுவேன் - துபாயில் இந்தியர்கள் மத்தியில் பிரதமர் மோடி உரை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

இந்தியாவில் தாம் 3வது முறையாக ஆட்சிக்‍கு வந்த பின்னர் நாட்டை உலகிலேயே 3வது பெரிய பொருளாதார வளமிக்‍க நாடாக உருவாக்‍குவேன் என பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாட்கள் சுற்றுப்பயணமாக ஐக்கிய அரபு அமீரகம் சென்றுள்ளார். அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொள்ள இருக்கிறார். நேற்று அபுதாபி சென்ற பிரதமர் மோடிக்கு விமான நிலையத்தில் ஐக்கிய அரபு அமீரக அதிபர் ஷேக் முகமது பின் சயீத் நேரில் சென்று வரவேற்றார். அதனைத் தொடர்ந்து பிரதமருக்கு ராணுவ மரியாதையும் அளிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து பிரதமர் மோடி தனியார் ஹோட்டலில் தங்குவதற்காக சென்றார். ஹோட்டலுக்‍கு முன் ஆயிரக்‍கணக்‍கான வெளிநாட்டு வாழ் இந்தியர்கள், திரண்டு வந்து பாட்டு பாடியும் இசைக்‍கருவிகளை இசைத்தும் பிரதமர் மோடிக்‍கு உற்சாக வரவேற்பு அளித்தனர். சிறுவர்கள் முதல் பெரியவர்கள், பெண்கள் என அங்கு திரண்டு இருந்த ஏராளமானோரை பிரதமர் சந்தித்தார். இந்திய வம்சாவளியினர், சிறுவர், சிறுமிகளுடன் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தார்.

இதையடுத்து அபுதாபியில் வணக்‍கம் மோடி என்ற தலைப்பில் நடைபெற்ற  பிரமாண்ட வரவேற்பு நிகழ்ச்சியில் இந்திய சமூகத்தினர் 65 ஆயிரத்துக்‍கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அவர்களை பிரதமர் மோடி சந்தித்தார். அபுதாபி ஜாயித் ஸ்போர்ட்ஸ் சிட்டி மைதானத்தில் நடைபெற்ற இந்த பிரமாண்ட வரவேற்பு நிகழ்ச்சியில் 700 நடனக்கலைஞர்கள் பங்கேற்றனர். கலை நிகழ்ச்சிகளை பிரதமர் மோடி கண்டு ரசித்தார்.  தொடர்ந்து மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள பிரமாண்ட மேடையில் பிரதமர் மோடி இந்திய மக்களிடையே உரையாற்றினார். ​அப்போது பேசிய அவர், இந்தியாவும், ஐக்‍கிய அரபு அமீரகமும் இணைந்து சிறந்த எதிர்காலத்தை வடிவமைக்‍க உள்ளதாக குறிப்பிட்டார். அபுதாபியில் இந்திய மாணவர்கள் ஒன்றரை லட்சம் பேர் படித்து வருவதாகவும், துபாயில் விரைவில் சி.பி.எஸ்.இ அலுவலகம் திறக்‍கப்படும் எனவும் பிரதமர் குறிப்பிட்டார் . ஒவ்வொரு இந்தியரின் பலத்திலும் தமக்‍கு நம்பிக்‍கை உள்ளதாக தெரிவித்தார். அபுதாபியில் கட்டப்பட்டுள்ள சுவாமி நாராயணன் கோவிலை பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார். 



Night
Day