இந்தியா கூட்டணி தலைவர்கள் விரும்பினால் சந்திரபாபு நாயுடு, நிதிஷ்குமாருடன் பேச்சுவார்த்தை நடத்த முடிவு - ராகுல் காந்தி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

இந்தியா கூட்டணி தலைவர்கள் விரும்பினால் சந்திரபாபு நாயுடு மற்றும் நிதிஷ்குமாருடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி ஆகியோர் டெல்லியில் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய ராகுல் காந்தி, அரசியலமைப்பு சட்டத்தை காக்கும் போராட்டத்தில் வெற்றி கண்டுள்ளோம் எனத் தெரிவித்தார். பிரதமர் மோடி மீது மக்கள் நம்பிக்கை இழந்து விட்டதாக கூறிய ராகுல் காந்தி பிரதமர் மோடியை நாட்டு மக்கள் நிராகரித்துவிட்டதாக விமர்சித்தார். மோடிக்கு ஆதரவாக செயல்பட்ட ED, சிபிஐ, தேர்தல் ஆணையம் என அனைத்தையும் எதிர்த்து சண்டையிட்டு வெற்றி பெற்றுவிட்டதாக அவர் தெரிவித்தார். வயநாடு, ரேபரேலி தொகுதிகளில் தன்னை மாபெரும் வெற்றி பெற வைத்த மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாக ராகுல் காந்தி கூறினார்.


Night
Day