இந்தியா பாகிஸ்தான் எல்லையில் நிலவும் பதற்றம் முடிவுக்கு வரும்-அமெரிக்க அதிபர் டிரம்ப்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

இந்தியா பாகிஸ்தான் எல்லையில் நிலவி வரும் பதற்றம் கண்டிப்பாக முடிவுக்கு வரும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.

மறைந்த போப் பிரான்சிஸ் இறுதிச் சடங்கில் பங்கேற்க வாடிகன் புறப்படும் முன்பாக செய்தியாளர்களை சந்தித்த அதிபர் டிரம்ப், பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் மோசமான ஒன்று என்று தெரிவித்தார். மேலும் இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு தான் நெருக்கமாக இருப்பதாக குறிப்பிட்ட டிரம்ப், இருநாடுகளும் ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக காஷ்மீருக்காக சண்டையிட்டு வருவதாக கூறினார். இந்த சண்டையால் இருநாட்டு எல்லைப் பகுதிகளில் பதற்றங்கள் இருந்து வருவதாக அவர் தெரிவித்தார். ஆனால் இந்த பதற்றம் ஏதோ ஒரு வழியில் கண்டிப்பாக தணிக்கப்படும் என்று நம்பிக்கை தெரிவித்தார். 

Night
Day