இந்தியா-பிரான்ஸின் கூட்டு வலிமையானது முன்னோக்கிச் செல்லும் பாதையை ஒளிரச் செய்யும்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

இந்தியா மற்றும் பிரான்ஸ் இடையேயான நட்புறவின் கூட்டு வலிமையானது, முன்னோக்கிச் செல்லும் பாதையை ஒளிரச் செய்யும் என குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நம்பிக்கை தெரிவித்துள்ளார். குடியரசுத் தலைவர் மாளிகையில் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானுக்கு நேற்றிரவு விருந்து அளிக்கப்பட்டது. அபபோது உரையாற்றிய முர்மு, இந்தியாவும் பிரான்சும், இரு நாடுகளின் மக்களுக்கும், குறிப்பாக இளைஞர்களுக்கு முக்கியமான எதிர்காலத்தை உருவாக்கி வருவதாகக் குறிப்பிட்டார். இரு நாடுகளும் வலுவான மற்றும் வெற்றிகரமான பிரான்சையும், பாதுகாப்பான மற்றும் வளர்ந்த இந்தியாவையும் உருவாக்கி வருவதாக தெரிவித்தார். இவ்விருந்தில் குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர், பிரதமர் நரேந்திர மோடி, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Night
Day