இந்தியா வருவதற்கு மருத்துவ விசா-பிரதமர் மோடி உரை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

வங்கதேச நாட்டவர்களுக்கு மருத்துவ இ-விசா வழங்கும் நடைமுறை விரைவில் ஏற்படுத்தப்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா 2 நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார். அவர் டெல்லியில் உள்ள ஐதராபாத்தில் பிரதமர் மோடியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் மோடி, வங்கதேச நாட்டவர்கள், இந்தியாவில் மருத்துவ சிகிச்சை பெற இ-விசா விரைவில் வழங்கப்படும் என்றார். மேலும் வங்கதேசத்தில் உள்ள ரங்பூரில் புதிய தூதரகம் ஒன்று அமைக்கப்படும் என்றும் பிரதமர் மோடி கூறியுள்ளார்.

Night
Day