எழுத்தின் அளவு: அ+ அ- அ
கிழக்கு லடாக் எல்லை பகுதியில் இருந்து படைகளை விலக்கிக் கொள்ளும் நடவடிக்கையை இந்தியா, சீனா இரு நாடுகளும் துவங்கியுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
எல்லை கட்டுப்பாடு கோட்டு பகுதியில் படை விலக்கல் மற்றும் ரோந்து பணி தொடர்பாக 4 ஆண்டுகளுக்கு மேலாக நீடிக்கும் சிக்கலை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் இரு நாடுகளுக்கும் இடையே அண்மையில் முக்கிய ஒப்பந்தம் கையெழுத்தானது. இதைத் தொடர்ந்து ரஷ்யாவின் கசான் நகரில் பிரதமர் மோடி, சீன அதிபர் ஷி ஜின்பிங் இடையே நடைபெற்ற இருதரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்ற நிலையில், கிழக்கு லடாக்கில் உள்ள பிரச்னைக்குரிய டெம்சோக் மற்றும் டெப்சோங் பகுதிகளில் இருந்து படைகளை விலக்கிக் கொள்ளும் நடவடிக்கையை இரு நாடுகளும் தொடங்கியுள்ளன. அதன்படி இந்த பகுதிகளில் இருந்து படைகளை பின்வாங்குவது மற்றும் தற்காலிக கட்டமைப்புகளை அகற்றும் பணி துவங்கப்பட்டுள்ளது. இரு நாடுகளுக்கு இடையே எல்லையில் அமைதி மற்றும் நிலைத்தன்மையை ஏற்படுத்தும் முக்கிய நடவடிக்கையாக இது கருதப்படுகிறது.