இந்திய அரசியலமைப்பின் புனிதக் கொள்கை பாஜகவின் ஆட்சியில் வெட்டப்படுகிறது - மல்லிகார்ஜுன கார்கே

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

இந்திய அரசியலமைப்பின் ஒவ்வொரு புனிதக் கொள்கையும் பாஜகவின் சர்வாதிகார ஆட்சியில் துண்டு துண்டாக வெட்டப்படுவதாக காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றம் சாட்டியுள்ளார். 

பெங்களூருவில் நடைபெற்ற குடியரசு தினவிழாவில் உரையாற்றிய அவர், அரசியலமைப்பின் நீதி, சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவம் என்ற  முக்கிய கொள்கைகளை பொதுமக்கள்தான் பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தினார். பல தசாப்தங்களாக கவனமாகக் கட்டமைக்கப்பட்ட நமது நிறுவனங்களின் தொடர்ச்சியான சீரழிவை ஆளும் கட்சி கட்டவிழ்த்துவிட்டதாக குற்றம் சாட்டிய கார்கே, ஆளும் அரசாங்கத்தின் கொடுங்கோல் போக்கு காரணமாக நாடாளுமன்றத்தின் செயல்பாட்டிலும் மிகப்பெரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக கவலை தெரிவித்தார்.



Night
Day