இந்திய உணவுக் கழகத்துக்கு ரூ.10,700 கோடி கூடுதல் மூலதன நிதி - மத்திய அரசு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

இந்திய உணவுக் கழகத்துக்கு கூடுதல் மூலதன நிதியாக 10 ஆயிரத்து 700 கோடி ரூபாய் ஒதுக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், எஃப்.சி.ஐ. பணியை விரிவுபடுத்தும் வகையில் அதன் மூலதனத்தை அதிகரிக்கும் விதமாக இந்திய உணவுக் கழகத்துக்கு கூடுதல் மூலதன நிதியாக 10 ஆயிரத்து 700 கோடி ரூபாய் ஒதுக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக தெரிவித்தார்.

Night
Day