இந்திய கடற்படையின் சார்பில் நடத்தப்பட்ட 'மிலன் 24' 12-வது கடற்படை கூட்டுப்பயிற்சி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

இந்திய கடற்படையின் சார்பில், 'மிலன் 24' என்ற பெயரில் நடத்தப்பட்ட 12-வது கடற்படை கூட்டுப்பயிற்சி, ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினத்தில் நேற்று நிறைவடைந்தது. கடந்த பிப்ரவரி 19-ஆம் தேதி தொடங்கி 9 நாட்கள் நடைபெற்ற இந்த கூட்டுப்பயிற்சியில் அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா, பிரான்ஸ், தென்கொரியா, வியட்நாம், இந்தோனேசியா, மலேசியா உட்பட 35 நாடுகளின் கடற்படைகள் கலந்து கொண்டன. நட்பு நாடுகளிலிருந்து 13 போர்க்கப்பல்கள் மற்றும் ஒரு கடல் ரோந்து விமானம் வரவழைக்கப்பட்டன. இந்திய கடற்படையில் இருந்து, விமானம் தாங்கி  கப்பல்களான விக்ராந்த் மற்றும் விக்ரமாதித்யா உட்பட கிட்டத்தட்ட 20 கப்பல்களும், MiG 29K, தேஜாஸ் மற்றும் நீண்ட தூர கடல் கண்காணிப்பு மற்றும் நீர்மூழ்கி எதிர்ப்பு போர் விமானங்கள் பயிற்சியில் பங்கேற்றன. 

Night
Day