இந்திய கடலோரக்‍ காவல்படையின் 48வது எழுச்சி தினம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

இந்திய கடலோர காவல்படையின் 48வது எழுச்சி தினம் கொண்டாடப்பட்டது. இந்திய கடலோரக் காவல்படை, 1977 ஆம் ஆண்டு பிப்ரவரி ஒன்றாம் தேதி தொடங்கப்பட்டது. அதனை ஒட்டி ஆண்டுதோறும் இந்திய கடலோர காவல்படை எழுச்சி தினம் பிப்ரவரி 1 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. மொத்தம் 158 கப்பல்கள் மற்றும் 70 விமானங்களைக் கொண்ட ஒரு வலிமைமிக்கப் படையாக உள்ள இந்திய கடலோர காவல்படை உலகின் நான்காவது பெரிய கடலோரக் காவல்படையாக உள்ளது. இந்தியக் கடலோரப் பகுதிகளைப் பாதுகாப்பதிலும், இந்தியாவின் கடல்சார் மண்டலங்களில் கட்டுப்பாடுகளை அமல்படுத்துவது மட்டுமின்றி இந்தியக் கடல் வழிகள் மூலம் கடத்தலைத் தடுத்து வருவது குறிப்பிடத்தக்‍கது.

Night
Day