இந்திய சுகாதார கட்டமைப்பு 5 தூண்களைக் கொண்டது - பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

 கடந்த 10 ஆண்டுகளாக மக்களுக்‍கான அடிப்படை வசதி, இளைஞர்களுக்‍கான வேலை வாய்ப்பு என இரு இலக்குகளை தீர்மானித்து, உள்கட்டமைப்பில் அதிக கவனம் செலுத்தி வருவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

தனது சொந்த தொகுதியான உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி, 6 ஆயிரத்து 100 கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சி திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார். அங்கு லால் பகதூர் சாஸ்திரி விமான நிலையத்தில் 2 ஆயிரத்து 870 கோடி மதிப்பில் கட்டப்பட உள்ள விமான ஓடுதளம், ஆண்டுக்கு 2.3 கோடி பயணியர் வந்து செல்லும் வகையிலான புதிய விமான நிலைய முனையம் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து, ஆர்.ஜே., சங்கரா கண் மருத்துவமனையை திறந்து வைத்தார். தொடர்ந்து 210 கோடி ரூபாய் மதிப்பிலான விளையாட்டு அறிவியல் மையம் உள்ளிட்ட விளையாட்டு வீரர்களுக்கான திட்டங்களை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, சுற்றுலா மற்றும் தொழில் ரீதியாக வாரணாசிக்‍கு வருவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதன் மூலம் பயனடைய முடியும் என்றும் பபத்பூர் விமான நிலையம் விரிவாக்கம் செய்யப்பட்ட பிறகும், மேலும் பலனடைய முடியும் என்று தெரிவித்தார். அரசியல் தொடர்பே இல்லாத ஒரு லட்சம் இளைஞர்களை அரசியலுக்கு கொண்டு வருவேன் என்றும், இது இந்திய அரசியலின் திசையையே மாற்றும் எனவும், ஊழல் மற்றும் வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும் எனவும் பிரதமர் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சிகளில் ஆளுநர் ஆனந்திபென் படேல், முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Night
Day