இந்தியா
கட்டண உயர்வு - ஜியோவிலிருந்து 11 கோடி வாடிக்கையாளர்கள் வெளியேற்றம்...
ஜியோ நிறுவனத்தின் தொலைத்தொடர்பு கட்டண உயர்வை தொடர்ந்து சுமார் 11 கோடி பயனர...
உளவுத்துறை எச்சரிக்கையை தொடர்ந்து இந்திய தலைமை தேர்தல் ஆணையருக்கு Z பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் 7 கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. இதனையொட்டி இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் பல்வெறு மாநிலங்களுக்கு தேர்தல் பணிக்காக பயணித்து வருகிறார். இந்நிலையில், உளவுத்துறை அளித்த எச்சரிக்கை அறிக்கையையடுத்து, ராஜீவ் குமாருக்கு பாதுகாப்பை அதிகரிக்க உள்துறை அமைச்சகம் முடிவு செய்தது. இதனையடுத்து, அவருக்கு Z பிரிவு பாதுகாப்பை உள்துறை அமைச்சகம் வழங்கியுள்ளது. மொத்தம் 22 பாதுகாப்பு வீரர்கள் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பாதுகாப்பு வழங்குவார்கள் என்றும், மறு உத்தரவு வரும் வரை தலைமை தேர்தல் ஆணையருக்கு Z பிரிவு பாதுகாப்பு தொடரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜியோ நிறுவனத்தின் தொலைத்தொடர்பு கட்டண உயர்வை தொடர்ந்து சுமார் 11 கோடி பயனர...
திமுக அரசு ஆட்சிக்கு வந்தபோதெல்லாம் ஒரு முறைக்கூட யானைகள் புத்துணர்வு மு...