இந்திய தேசிய லோக் தளம் கட்சித் தலைவர் நஃபே சிங் ரதீ கொலை வழக்கு CBI-க்கு மாற்றம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

இந்திய தேசிய லோக் தளம் கட்சித் தலைவர் நஃபே சிங் ரதீ கொலை வழக்கு CBI வசம் ஒப்படைக்கப்படும் என ஹரியானா அரசு அறிவித்துள்ளது. சட்டப்பேரவையில் காங்கிரஸ் கொண்டு வந்த ஒத்திவைப்புத் தீர்மானத்திற்கு பதிலளித்துப் பேசிய மாநில உள்துறை அமைச்சர் அனில் விஜ் இதனைத் தெரிவித்தார். ஹரியானாவின் பிரபல அரசியல் பிரமுகரும், இந்திய தேசிய லோக் தளம் கட்சியின் தலைவருமான நஃபே சிங் ரதீ, கடந்த ஞாயிற்றுக்கிழமை மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்தக் கொலை தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படாத நிலையில், சந்தேகத்திற்குரிய நபர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக மாநில போலீசார் கூறியுள்ளனர். இந்தநிலையில் வழக்கு தற்போது CBI-க்கு மாற்றப்பட்டுள்ளது.

Night
Day