இந்திய தேர்தல் ஆணையர் அருண் கோயல் ராஜினாமா

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் சில சில வாரங்களே உள்ள நிலையில் தேர்தல் ஆணையர் அருண் கோயல் ராஜினாமா செய்துள்ள சம்பவம் இந்திய அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய தேர்தல் ஆணையத்தில் தலைமை ஆணையர் மற்றும் 2 ஆணையர்கள் பொறுப்பில் இருப்பது வழக்கம். அந்த வகையில் தலைமை தேர்தல் ஆணையராக ராஜீவ் குமாரும் அனுப் பாண்டே மற்றும் அருண் கோயல் ஆகியோர் மற்ற ஆணையர்களாக பதவி வகித்து வந்தனர். இதில் அனுப் பாண்டே கடந்த மாதம் ஓய்வு பெற்ற நிலையில் புதிய ஆணையர் நியமிக்கப்படாமல் இருந்து வந்தது. ராஜீவ் குமார் மற்றும் அருண் கோயல் ஆகியோர் மட்டுமே மக்களவைத் தேர்தலுக்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வந்தனர். 

இந்தநிலையில்தான் திடீரென அருண் கோயல் ராஜினாமா செய்துள்ளார். அதனை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவுடம்  உடனடியாக ஏற்றுக் கொண்ட நிலையில் இது அரசிதழிலும் வெளியானது. தேர்தல் தேதிகள் அடுத்த வாரம் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கோயலின் ராஜினாமா அதில் கேள்விக்குறியை ஏற்படுத்தியுள்ளது. கோயலின் பதவிக்காலம் 2027 வரை உள்ள நிலையில் அடுத்த ஆண்டு ராஜீவ் குமாரின் ஓய்வுக்குப் பிறகு அவர்தான் தலைமைத் தேர்தல் ஆணையராக நியமிக்கப்படுவார் என்ற நிலையில் இந்த திடீர் ராஜினாமா இந்திய அரசியலில் பேசுபொருளாகியுள்ளது.

Night
Day