இந்திய பங்குச்சந்தைகள் : சென்செக்ஸ் 1,000 புள்ளிகள், நிஃப்டி 320 புள்ளிகள் உயர்வு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

இந்திய பங்குச்சந்தைகள் வாரத்தின் முதல் நாளில் விறுவிறு உயர்வை சந்தித்தன.

மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் ஆயிரம் புள்ளிகளை கடந்து 71ஆயிரத்து 700 புள்ளிகளை தாண்டி வர்த்தகமாகி வருகிறது. தேசிய பங்குச்சந்தை நிஃப்டியும் 320 புள்ளிகளை கடந்து 21 ஆயிரத்து 600 புள்ளிகளை தாண்டி வர்த்தகம் ஆகிவருகிறது. இன்றைய வர்த்தகத்தின் போது ஓ.என்.ஜி.சி. , அதானி எண்டர்பிரைசஸ், ரிலையன்ஸ், அதானி போர்ட்ஸ், கோல் இந்தியா பங்குகள் லாபத்தையும், சிப்லா, ரெட்டீஸ் லேப், பஜாஜ் ஆட்டோ, ஐ.டி.சி. நிறுவன பங்குகள் நஷ்டத்தையும் சந்தித்தன. ஆசிய பங்குச்சந்தைகளான ஜப்பானின் நிக்கி, ஹாங்காங்கின் ஹாங்செங், தென் கொரியாவின் கோஸ்பி ஆகியவை ஏற்றம் கண்டதை தொடர்ந்து இந்திய பங்குச்சந்தையும் உயர்வை சந்தித்தது குறிப்பிடத்தக்கது...

Night
Day