இந்திய ராணுவத்தின் பதிலடியால் பாகிஸ்தான் வீரர்கள் 2 பேர் கொல்லப்பட்டதாக தகவல்..!

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் 2வது நாளாக துப்பாக்கிச் சூடு நடைபெற்று வருவதால் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது.

காஷ்மீரின் பஹல்காமில் கடந்த 22ம் தேதி நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து இந்தியாவும் பாகிஸ்தானும் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதிகளில் படைகளை குவித்து வருகின்றன. இதன் காரணமாக இரு நாடுகளுக்கும் போர் மூளும் சூழல் உருவாகி பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதனிடையே எல்லைப் பகுதியில் நேற்று பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்திய நிலையில் இந்திய ராணுவம் பதிலடிகொடுத்தது. இதில் இரண்டு பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து இன்றும் இரண்டாவது நாளாக பாகிஸ்தான் ராணும் துப்பாக்கிச் சூடு நடத்தியதால் இந்திய ராணுவம் பதிலடி கொடுத்து வருகிறது. 

Night
Day