இந்திய ராணுவத்திற்கு நிதி அளிக்கக் கோரி பரப்பப்படும் செய்திகள் தவறானது - மத்திய அரசு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

இந்திய ராணுவத்திற்கு நிதி அளிக்கக் கோரி வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரப்பப்படும் செய்திகள் தவறானது என மத்திய அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.


பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு இந்தியா-பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்து வரும் நிலையில்,  இந்திய ராணுவத்தை நவீனமயமாக்குவதற்காக நன்கொடைகள் கோரி மத்திய அரசு வங்கிக் கணக்கை திறந்துள்ளதாக வாட்ஸ் அப்பில் செய்திகள் பரவி வருகிறது. இந்தநிலையில் பாதுகாப்புத்துறை வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில், இந்தச் செய்தியில் உள்ள கணக்கு விவரங்கள் தவறானவை என்றும் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் மோசடி செய்திகளுக்கு பலியாகக்கூடாது என்றும் அறிவுறுத்தியுள்ளது.


Night
Day