இந்திய ராணுவ வீரர்கள் சீருடையிலோ, சீருடை இல்லாமலோ நடமாட அனுமதிக்க முடியாது

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மே 10ஆம் தேதிக்கு பிறகு இந்திய ராணுவ வீரர்கள் சீருடைகளுடனோ, அல்லது சாதாரண உடையிலோ நாட்டில் நடமாட அனுமதிக்க முடியாது என மாலத்தீவு அரசு திட்டவட்டமாக கூறியுள்ளது. சீனாவுடனான ராணுவ ஒப்பந்தம் கையெழுத்தான நிலையில் மாலத்தீவு அதிபர் முகமது முய்சு இத்தகைய கருத்தை வெளிப்படுத்தி உள்ளார். மாலத்தீவில் உள்ள விமான உபகரணங்களை கையாள்வதற்காக இந்திய ராணுவ வீரர்களுக்கு பதிலாக இந்திய பணியாளர்கள் சென்றுள்ள நிலையில், இந்திய ராணுவ வீரர்கள் சீருடையிலோ, அல்லது சீருடை இல்லாமலே எவரும் தங்கள் நாட்டில் இருக்க அனுமதிக்கமுடியாது என மாலத்தீவு அரசு தெரிவித்துள்ளது. இதன் மூலம் இந்தியர் எவரும் மே 10ஆம் தேதிக்கு மேல் மாலத்தீவில் தங்கமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

varient
Night
Day