இந்திய வரலாற்றில் ஜன.22 சிறப்பான நாள் - ராமர் கோயில் திறப்பு விழாவில் பிரதமர் மோடி பெருமிதம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

இன்னும் ஆயிரம் ஆண்டுகளுக்‍குப் பிறகும் மக்‍கள் ராமர் புகழைப் பாடுவார்கள் என்று பால ராமர் சிலை பிரதிஷ்டைக்‍கு பிறகு பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார்.

உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தில் கட்டப்பட்ட ராமர் கோயில் கும்பாபிஷேகத்தில் கலந்துகொண்ட பிரதமர் மோடி, சிலை பிரதிஷ்டைக்‍குப் பிறகு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், கோவில்கள் திருவிழாக்கள் போல் காணப்படுகின்றன என்றும் நாடு முழுவதும் தீபாவளி கொண்டாடப்படுவதாகவும் கூறினார். பல நூற்றாண்டுகள் பொறுமை, எண்ணற்ற தியாகங்கள் மற்றும் தவங்களுக்குப் பிறகு, நம் பகவான் ராமர் வந்திருக்கிறார். இனி ராமர் கூடாரத்தில் வசிக்க மாட்டார் என்றும் தெய்வீகக் கோவிலில்தான் வசிப்பார் என்றும் பிரதமர் கூறினார். இது யாரையும் வீழ்த்தியதால் கிடைத்த வெற்றி அல்ல, கண்ணியமாக கிடைத்த வெற்றி என்று குறிப்பிட்ட பிரதமர், அயோத்தியில் நிறுவப்பட்டது சிலை மட்டும் அல்ல. இந்திய கலாசாரமும்கூட என்று தனது உரையில் கூறினார். நீதியின் மாண்பைக் காப்பாற்றி ராமர் கோயில் அமைய காரணமாக இருந்த இந்திய நீதித்துறைக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாகக் கூறிய பிரதமர்,  தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கான நமது முயற்சிகளை ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு தலைமுறையினர்  நினைவுகூருவார்கள் என்று பேசினார். 

Night
Day