இந்தோனேஷியாவில் தங்கச்சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

இந்தோனேஷியாவில் தங்கச்சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 
உயி​ரிழந்தோர் எண்ணிக்‍கை 23 ஆக உயர்ந்துள்ளது. இந்தோனேசியாவின் சுலவேசி தீவில் அரசால் அங்கீகரிக்கப்படாத தங்கச் சுரங்கம் உள்ளது. இங்குள்ள மலைப்பகுதி கிராமமான போன் பொலாங்கோவில் 100க்கும் மேற்பட்டோர் தங்கம் தேடிக்கொண்டு இருந்தனர். அப்போது திடீரென மலையில் இருந்து மண் சரிந்து சுரங்கப்பகுதியை மூடியது. இதில் தங்கம் தேடிக்கொண்டு இருந்த நூற்றுக்கணக்கான மக்கள் சிக்கிக்கொண்டனர். இந்த நிலச்சரிவில் 23 பேர் உயிரிழந்தனர், 66 பேர் மீட்கப்பட்டனர். மேலும் 35 பேரை காணவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கு பெய்து வரும் கனமழையால் நிலச்சரிவு ஏற்பட்டு  ஐந்து கிராமங்களில் வெள்ளம் புகுந்துள்ளது. இதில் 300 வீடுகள் மூழ்கிவிட்டதாகவும், ஆயிரத்துக்‍கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பாக அப்புறப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Night
Day