இன்சாட் -3டிஎஸ்' செயற்கைகோளை சுமந்து செல்கிறது ஜி.எஸ்.எல்.வி. -எப்14 ராக்கெட்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

காலநிலை மற்றும் வானிலை தரவுகளை பெறுவதற்கான 'இன்சாட் -3டிஎஸ்' செயற்கைகோளை சுமந்தபடி ஜி.எஸ்.எல்.வி. -எப்14 ராக்கெட் பிப்ரவரியில் விண்ணில் பாய உள்ளதாக இஸ்ரோ தெரி​வித்துள்ளது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ புத்தாண்டு தினத்தன்று பி.எஸ்.எல்.வி. சி-58 ராக்கெட்டில் 'எக்ஸ்-ரே போலரிமீட்டர்' என்ற செயற்கைகோளை பொருத்தி விண்ணில் வெற்றிகரமாக ஏவியது. இதனை தொடர்ந்து, இஸ்ரோ தற்போது, ஜி.எஸ்.எல்.வி.-எப்14 என்ற ராக்கெட்டில் இன்சாட்-3டிஎஸ் செயற்கைகோள்களை விண்ணில் செலுத்த தயாராகி வருகிறது. இது திரவ உந்துசக்தியைப் பயன்படுத்தும் மேம்பட்ட ராக்கெட்டாகும். இதனை வருகிற பிப்ரவரி முதல் வாரத்தில் விண்ணில் ஏவ இஸ்ரோ திட்டமிட்டு உள்ளது.

Night
Day