எழுத்தின் அளவு: அ+ அ- அ
பல்வேறு அரசுத் துறைகள் மற்றும் அமைப்புகளில் புதிதாக நியமிக்கப்பட்ட இளைஞர்களுக்கு 51 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணி நியமனக் கடிதங்களை பிரதமர் நரேந்திர மோடி வழங்கினார்.
வேலைவாய்ப்பு உருவாக்கத்திற்கு அதிக முன்னுரிமை அளிக்க வேண்டும் என்ற பிரதமரின் உறுதிப்பாட்டிற்கு இணங்க, இன்று நாடு முழுவதும் 47 இடங்களில் 15வது வேலை வாய்ப்புத் திருவிழா நடைபெற்றது.
டெல்லியில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று 51 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு காணொலி மூலம் பணி நியமன ஆணைகளை வழங்கினார். புதிதாகப் பணியமர்த்தப்பட்டவர்கள் மத்திய அரசில் வருவாய்த் துறை, பணியாளர் மற்றும் பொது குறைகள் மற்றும் ஓய்வூதிய அமைச்சகம், உள்துறை அமைச்சகம், அஞ்சல் துறை, உயர்கல்வித் துறை, ரயில்வே அமைச்சகம், தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சேருவார்கள்.
பின்னர் பேசிய பிரதமர், இன்று நியமன கடிதங்கள் பெற்றுள்ள 51 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு புதிய பொறுப்புகள் தொடங்கியுள்ளதாக குறிப்பிட்டார். நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவது, உள்நாட்டுப் பாதுகாப்பு, மேம்பாடு ஆகியவை உங்கள் பொறுப்பு' என்று பிரதமர் தெரிவித்தார்.