இன்று மத்திய பட்ஜெட் கூட்டத் தொடர்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பரபரப்பான அரசியல் சூழலில் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடா் இன்று தொடங்குகிறது.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடா் ஜூலை இறுதியில் தொடங்குவது வழக்கம். அனால் நடப்பாண்டு மக்களவைத் தோ்தல் நடைபெற்றதால், மழைக்கால கூட்டத் தொடரானது பட்ஜெட் கூட்டத் தொடராக மாற்றி அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று தொடங்கி ஆகஸ்ட் 12-ம் தேதி வரை 19 அமா்வுகளுடன் இக்கூட்டத் தொடா் நடைபெறுகிறது. 

முதல் நாளான இன்று பொருளாதார ஆய்வறிக்கையை மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறாா். தொடர்ந்து நாளை 2024-25-ம் நிதியாண்டுக்கான முழு பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். இந்த பட்ஜெட்டில் சமூக, பொருளாதாரம் சாா்ந்த முக்கிய அறிவிப்புகள் இடம்பெறும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. அத்துடன் பேரிடா் மேலாண்மை திருத்த மசோதா உள்ளிட்ட 6 புதிய மசோதாக்கள் கூட்டத் தொடரில் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

இதனிடையே இந்தக் கூட்டத் தொடரில் மணிப்பூா் விவகாரத்தை இந்தியா கூட்டணி முழு பலத்துடன் முன்வைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ரயில் விபத்துகள், நீட் முறைகேடு போன்ற விவகாரங்களையும் எழுப்ப எதிா்க்கட்சிகள் தயாராக உள்ளன. பாஜகவின் கடந்த இரு ஆட்சிக் காலங்களைப் போல் இல்லாமல், இப்போது எதிா்க்கட்சியான இந்தியா கூட்டணி பெரும் பலத்துடன் இருப்பதால் அவையில் அனல் பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்தநிலையில், சபாநாயகரின் உத்தரவுகளை விமா்சிக்கக் கூடாது, அவைக்குள் பதாகைகள், படம், வாசக அட்டை போன்றவற்றைக் காண்பிக்கக் கூடாது என்பன உள்ளிட்ட விதிமுறைகளை நினைவூட்டி மாநிலங்களவைச் செயலகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

Night
Day