எழுத்தின் அளவு: அ+ அ- அ
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் இன்று துவங்கிய நிலையில் அதானி, மணிப்பூர் விவகாரம் தொடர்பாக விவாதிக்க கோரி எதிர்க் கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டன.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கி, டிசம்பர் 20ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தொடரில், வக்பு வாரிய திருத்த மசோதா உள்பட 16 மசோதாக்களை தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்த குளிர்கால கூட்டத்தொடரில் மணிப்பூர் வன்முறை, அதானி விவகாரம் உள்ளிட்ட பல பிரச்னைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.
பரபரப்பான அரசியல் சூழ்நிலைக்கு மத்தியில், நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் இன்று துவங்கியது. மக்களைவை கூடியதும் அதானி உள்ளிட்ட விவரங்களை எழுப்பி எதிர்க் கட்சியினர் முழக்கங்கள் எழுப்பினர். இதற்கிடையில், மறைந்த உறுப்பினர்களுக்கு அஞ்சலி செலுத்திய பிறகு மக்களவை நண்பகல் 12 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது.
அதன்பிறகு மக்களவை தொடங்கிய நிலையில் மீண்டும் எதிர்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. அதேபோன்று மாநிலங்களவையும் ஒத்திவைக்கப்பட்டது...