இரு விண்கலன்களை இணைக்கும் இன்றைய நிகழ்வு ஒத்திவைப்பு - இஸ்ரோ

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பி.எஸ்.எல்.வி. சி60 ராக்கெட் மூலம்  ஏவப்பட்ட இரு விண்கலன்களை இணைக்கும் நிகழ்வு ஒத்திவைக்கப்படுவதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.

கடந்த டிசம்பர் 30ம் தேதி சேஸர், டார்கெட் ஆகிய விண்கலன்களை உள்ளடக்கிய ஸ்பேடெக்ஸ் விண்கலன்கள், பி.எஸ்.எல்.வி. சி60 ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. கடந்த 7ம் தேதி இரு விண்கலன்களை ஒருங்கிணைக்கும் ஆய்வுப்பணியை மேற்கொள்ள இஸ்ரோ திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், தரைக்கட்டுப்பாட்டு மையத்தின் நிலைப்படுத்துதலில் ஒப்புதல் பெற முடியாததால், இரு விண்கலன்களையும் ஒருங்கிணைக்கும் திட்டத்தை இன்று ஒத்திவைப்பதாக இஸ்ரோ அறிவித்தது. இந்த நிலையில், தொழில்நுட்ப கோளாறு காரணமாக மீண்டும், ஒத்திவைக்கப்படுவதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.

Night
Day