இலங்கையில் சிகிச்சை பெற்று வரும் தமிழக மீனவர்கள் - நேரில் நலம் விசாரித்த இந்திய தூதரக அதிகாரிகள்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

இலங்கை கடற்படையின் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்து அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் காரைக்கால் மீனவர்களிடம் இந்திய தூதரக அதிகாரிகள் நலம் விசாரித்தனர். 


கடந்த மாதம் 27-ம் நடைபெற்ற இந்த சம்பவம் தொடர்பாக புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன், இலங்கையில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளிடம் தொலைபேசியில் கேட்டறிந்தார். காயமடைந்த 2 மீனவர்களின் உடல்நிலை, அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து ஆய்வு செய்து தெரிவிக்குமாறு அவர் கேட்டுக் கொண்டார். அதன்பேரில் தமிழக மீனவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து இந்திய தூதரக அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்தனர். இது தொடர்பான புகைப்படங்களை அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர்.  

Night
Day