இலங்கை மீனவர்களை கண்டித்து காரைக்காலில் ரயில் மறியல் போராட்டம்

எழுத்தின் அளவு: அ+ அ-

புதுச்சேரி காரைக்கால் மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்திய இலங்கை கடற்படையை கண்டித்து 200க்கும் மேற்பட்ட மீனவர்கள் ரயில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆழ்கடலில் மீன்பிடித்ததாக கூறி காரைக்கால் மீனவர்கள் மீது கடந்த 27 ஆம் தேதி இலங்கை கடற்படை துப்பாக்கி சூடு நடத்தியது. இலங்கை கடற்படையின் அத்துமீறிய தாக்குதலில்  3 மீனவர்கள் காயமடைந்தனர். இதனை கண்டித்து கடந்த 7 நாட்களாக காரைக்கால் மீனவர்கள் மற்றும் உறவினர்கள் பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், துப்பாக்கி சூட்டில் காயமடைந்து இலங்கை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள 3 மீனவர்கள் மேல் சிகிச்சைக்காக விடுவிக்க வலியுறுத்தி காரைக்கால் மீனவர்கள் இன்று ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்காத மத்திய மற்றும் புதுச்சேரி அரசுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.  ரயில் தண்டவாளத்தில் தலை வைத்து காரைக்கால் மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் 100க்கும் மேற்பட்ட போலீசார் ரயில் நிலையத்தில் குவிக்கப்பட்டனர்.  

Night
Day