இளம்பருவத்தினர் தற்கொலையைத் தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன - உச்ச நீதிமன்றம் கேள்வி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நாட்டில் தற்கொலைகளைத் தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து மத்திய சுகாதாரத்துறை பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டெல்லியில் இளம் பருவத்தினரின் தற்கொலை விவகாரம் தொடர்பாக வழக்கறிஞர் கௌரவ் குமார் பன்சால் தாக்கல் செய்த பொதுநல மனுவில், 2014 முதல் 2018 வரை டெல்லியில் 18 வயதுக்குட்பட்ட 400-க்கும் மேற்பட்ட இளம்பருவத்தினர் தற்கொலை செய்து கொண்டதாக RTI தகவலை குறிப்பிட்டிருந்தார். மனுவை விசாரித்த தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு, குழந்தைகள் தற்கொலை செய்துகொள்வது மிகவும் தீவிரமான சமூகப் பிரச்சினை எனக் கூறி 4 வாரங்களுக்குள் இது தொடர்பாக பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய மத்திய சுகாதாரத்துறைக்கு உத்தரவிட்டது.

Night
Day