இஸ்ரேலில் பணியாற்ற வரிசை கட்டி நிற்கும் ஹரியானா மாநில தொழிலாளர்கள்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கடும் போருக்கு இடையிலும், இஸ்ரேலில் பணிபுரிவதற்காக ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் ஆட்சேர்ப்பு  அலுவலகம் முன் காத்திருக்கின்றனர். நான்கு மாதங்களாக காசா மீது நீடிக்கும் தாக்குதலானது தொழிலாளர் பற்றாக்குறையை ஏற்படுத்தியுள்ளது.
அதனால் அங்கு செல்வதற்கு ரோஹ்தக்கில் உள்ள அலுவலகம் முன் குவிந்துள்ள தொழிலாளர்கள், வேலை வாய்ப்பின்மை காரணமாகவே இஸ்ரேல் செல்ல முடிவெடுத்ததாகக் கூறியுள்ளனர். உயிருக்கு ஆபத்து ஏற்படும் அபாயம் இருந்தாலும் வேறு வழியில்லை என்றும் அங்கேதான் மரணம் என்ற விதி இருந்தால் மாற்ற முடியாது என்றும் விரக்தி தெரிவித்துள்ளனர். இந்தியாவில் 29 வயதிற்குட்பட்ட தொழிலாளர்களில் 17 சதவீதத்திற்கும் அதிகமானோர் வேலையில்லாமல் இருப்பதாக கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

Night
Day