இஸ்லாமிய அடிப்படைவாதிகளுக்கு மட்டுமே காங்கிரஸ் நன்மை செய்துள்ளதாக பிரதமர் மோடி விமர்சனம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

இஸ்லாமிய அடிப்படைவாதிகளுக்கு மட்டுமே காங்கிரஸ் நன்மை செய்துள்ளதாகவும், அக்கட்சியின் வக்ஃப் திருத்தச் சட்ட எதிர்ப்பே அதனை நிரூபிப்பதாகவும் பிரதமர் மோடி விமர்சித்துள்ளார்.  

ஹரியானாவில் உள்ள ஹிசார் விமான நிலையத்தை பிரதமர் மோடி இன்று திறத்து வைத்து அயோத்திக்கு விமான சேவையைத் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பேசிய அவர்,  மத்திய அரசின் ஒவ்வொரு முடிவும் கொள்கையும் பாபாசாகேப் அம்பேத்கருக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது என்றார். அம்பேத்கருக்கு காங்கிரஸ் செய்ததை நாம் ஒருபோதும் மறக்கக்கூடாது என்றும் அவர் உயிருடன் இருந்தபோது,  காங்கிரஸ் அவரை மீண்டும் மீண்டும் அவமதித்ததாக பிரதமர் மோடி குற்றம் சாட்டினார்.

அரசியல் லாபத்திற்காக வக்ஃப் திருத்த சட்டத்தில் காங்கிரஸ் தன்னிச்சையான மாற்றங்களைச் செய்ததாகவும் அதனால் அரசியலமைப்பே தலைகீழாக மாற்றப்பட்டதாகவும் கூறிய பிரதமர் மோடி, இஸ்லாமியர்கள் மேல்  அக்கறை கொண்டிருந்தால், காங்கிரஸ் ஏன் ஒரு இஸ்லாமியரை அதன் கட்சித் தலைவராக்கவில்லை என்றும் கேள்வி எழுப்பினார்.

வக்ஃப் சொத்துக்கள் நேர்மையாகப் பயன்படுத்தப்பட்டிருந்தால், இஸ்லாமிய இளைஞர்கள் சைக்கிள் பஞ்சர்களை சரி செய்து வாழ்வாதாரம் ஈட்ட வேண்டிய அவசியமில்லை எனக் கூறிய அவர், ஆனால் இந்த சொத்துக்களால் ஒரு சில நில மாஃபியாக்கள் மட்டுமே பயனடைந்ததாக குறிப்பிட்டார். வக்ஃப் சட்டத்தில் தற்போது மாற்றங்கள் செய்யப்பட்ட பிறகு இந்தக் கொள்ளை நின்றுவிடும் என்றும் ஏழை இஸ்லாமியர்கள் தங்கள் உரிமைகளைப் பெறுவார்கள் என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார்.

Night
Day