ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு பிப்ரவரி 5ம் தேதி இடைத்தேர்தல்

எழுத்தின் அளவு: அ+ அ-

 டெல்லி சட்டப்பேரவைக்கு ஒரே கட்டமாக வரும் பிப்ரவரி 5-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதேபோன்று ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலும் பிப்ரவரி 5-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, 70 தொகுதிகளை கொண்ட டெல்லி சட்டப்பேரவைக்கு வரும் பிப்ரவரி 5-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தெரிவித்தார். 

வேட்பு மனுத்தாக்கல் வரும் 10-ம் தேதி தொடங்கும் என்றும் மனுக்களை தாக்கல் செய்ய வரும் 17-ம் தேதி கடைசி நாள் என்றும் கூறினார்.

வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை வரும் 18-ம் தேதி நடைபெறும் என்றும் மனுக்களை திரும்ப பெற வரும் 20-ம் தேதி கடைசி நாள் என்றும் ராஜீவ் குமார் தெரிவித்தார்.

வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 8-ம் தேதி நடைபெறும் என்றும் கூறினார்.

இதேபோன்று காலியாக உள்ள ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி 5-ம் தேதி நடைபெறும் என்றும் வாக்குகளை எண்ணும் பணி பிப்ரவரி 8-ம் தேதி நடைபெற உள்ளதாகவும் ராஜீவ் குமார் தெரிவித்தார்.

varient
Night
Day