ஈஷா மைய நிறுவனர் ஜக்கி வாசுதேவுக்கு மூளையில் அறுவை சிகிச்சை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ரத்தப்போக்கால் அவதிப்பட்டு வந்த ஈஷா அறக்கட்டளை நிறுவனர் ஜக்கி வாசுதேவிற்கு மூளையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதுகுறித்து ஈஷா அறக்கட்டளை வெளியிட்டுள்ள வீடியோவில், கடந்த ஒரு மாதமாக மூளையில் ஏற்பட்டிருந்த ரத்தக்கசிவால் அவதிப்பட்டு வந்த ஜக்கி வாசுதேவ், கடந்த 17ம் தேதி வலியின் தீவிரத்தால் டெல்லியிலுள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பின்னர் ஜக்கி வாசுதேவிற்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நிலையில், தற்போது உடல் நிலை முன்னேறி வருவதாக நரம்பியல் நிபுணர் வினித் சூரி கூறியுள்ளார்.


ஈஷா அறக்கட்டளை நிறுவனர் ஜக்கி வாசுதேவ் விரைவில் பூரண குணமடைய தான் வாழ்த்துவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். மூளையில் ரத்தக் கசிவு காரணமாக டெல்லி அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜக்கி வாசுதேவிற்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தற்போது உடல்நலம் தேறி வரும் அவரிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்ட பிரதமர் மோடி, விரைவில் தாங்கள் பூரண குணமடைய வாழ்த்தவதாக கூறியுள்ளார். இதேபோல், ஆன்மீகத் தலைவர் ஜக்கி வாசுதேவ் விரைவில் குணமடைய தான் இறைவனிடம் பிரார்த்திப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

Night
Day