உக்ரைனுக்கு வழங்கி வந்த ராணுவ உதவிகள் நிறுத்தப்படுவதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு..!

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ரஷ்யாவுக்கு எதிரான போரில் உக்ரைனுக்கு வழங்கப்பட்டு வந்த ராணுவ உதவி மற்றும் ஆயுத உதவிகளை நிறுத்துவதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். 

உக்ரைன் நேட்டோ கூட்டமைப்பில் சேருவதற்கு எதிர்ப்பு தெரிவித்த ரஷியா, அந்த நாடு மீது கடந்த 2022-ம் ஆண்டு போர் தொடுத்தது. ரஷியாவின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் தவித்த உக்ரைனுக்கு அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஜோ பைடன் தலைமையிலான நிர்வாகம் ஆயுத உதவியை செய்து வந்தது. இந்த சூழலில் அமெரிக்காவில் நடந்த தேர்தலில் வெற்றி பெற்ற டொனால்ட் டரம்ப் அதிபராக பதவியேற்றார். இதையடுத்து ஆட்சி மாற்றம் மட்டுமில்லாமல் ரஷியா-உக்ரைன் விவகாரத்தில் அமெரிக்காவின் நிலைப்பாட்டிலும் மாற்றம் ஏற்பட்டது.

அண்மையில் போர்  மற்றும் கனிமவள ஒப்பந்தம் தொடர்பாக கடந்த சில நாட்களுக்கு முன் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி மற்றும் அதிபர் டிரம்ப் பேச்சுவார்த்தை நடத்தினர். ரஷ்யாவுடன் போர் நிறுத்தத்தை டிரம்ப் வலியுறுத்திய நிலையில் அதை ஜெலன்ஸ்கி ஏற்க மறுத்தார். இதனால் பேச்சுவார்த்தை வாக்குவாதமாக மாறியதால் பேச்சுவார்த்தையின் போது பாதியிலேயே ஜெலன்ஸ்கி வெள்ளை மாளிகையில் இருந்து வெளியேறினார். 

இந்த நிலையில், ரஷ்யாவுக்கு எதிரான போரில் உக்ரைனுக்கு வழங்கப்பட்டு வந்த ராணுவ உதவி மற்றும் ஆயுத உதவிகளை நிறுத்துவதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார். அமைதிக்கான நிலைப்பாட்டை உக்ரைன் உறுதிப்படுத்தும் வரை ராணுவ உதவிகளையும் அமெரிக்கா நிறுத்தியுள்ளதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. டிரம்ப் – ஜெலன்ஸ்கி மோதல் விவகாரத்தில் சமரசத்தை ஏற்படுத்த முயற்சி செய்த நேட்டோ அமைப்பு,  அதிபர் டிரம்புடன் மோதல் போக்கை கடைபிடிக்க வேண்டாம் என்று ஜெலன்ஸ்கியிடம் அறிவுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Night
Day