உச்சநீதிமன்றத்தில் உள்ள மனுவை திரும்ப பெற்றார் கெஜ்ரிவால் - கீழமை நீதிமன்றத்தை நாட உள்ளதாக தகவல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

அமலாக்கத்துறையினரின் கைது நடவடிக்கைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் திரும்ப பெற்றுள்ளார். புதிய மதுபான கொள்கை முறைகேடு வழக்கில், அமலாக்கத்துறையில் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டார். இதற்கு எதிராக  உச்சநீதிமன்றத்தில் அவரது தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று அவசர வழக்காக நீதிபதி சஞ்சீவ் கண்ணா அமர்வில் விசாரணைக்கு வர இருந்தது. இந்நிலையில், மனுவை அரவிந்த் கெஜ்ரிவால் தரப்பு திரும்பப் பெற்றுள்ளது. அமலாக்கத்துறையால் அரவிந்த் கெஜ்ரிவால் இன்னும் ரிமாண்ட் செய்யப்படாததால் மனுவை திரும்ப பெறுவதாகவும், கைது நடவடிக்கை தொடர்பாக கீழமை நீதிமன்றத்தை நாட உள்ளதாகவும் அரவிந்த் கெஜ்ரிவால் தரப்பு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

Night
Day