உச்சநீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கன்னா நியமனம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

உச்சநீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கண்ணாவை நியமித்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உத்தரவிட்டுள்ளார்.

உச்சநீதிமன்றத்தின் 50வது தலைமை நீதிபதியாக கடந்த 2022-ஆம் ஆண்டு நியமிக்கப்பட்ட டி.ஒய்.சந்திரசூட் பதவிக்காலம் அடுத்த மாதம் 10ம் தேதியுடன் நிறைவடையவுள்ளது. இதையடுத்து புதிய தலைமை நீதிபதியாக மூத்த நீதிபதி சஞ்சீவ் கண்ணாவின் பெயரை சந்திரசூட் பரிந்துரைத்த நிலையில், தற்போது அதற்கு ஒப்புதல் அளித்து குடியரசுத் தலைவர் உத்தரவிட்டுள்ளார். இதன்மூலம் உச்சநீதிமன்றத்தின் 51-வது தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கண்ணா அடுத்த மாதம் 11-ம் தேதி பதவியேற்க உள்ளார். சஞ்சீவ் கண்ணாவின் பதவிக்காலம் 2025 மே 13ம் தேதி நிறைவடையும். எந்தவொரு நீதிமன்றத்திலும் தலைமை நீதிபதியாக பொறுப்பு வகிக்காமல் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கண்ணா பதவியேற்க இருப்பது குறிப்பிடத்தக்கது.

Night
Day