உடல் எடை குறைக்க 6 மாதங்களாக தண்ணீர் மட்டுமே குடித்து வந்த கேரள பெண் உயிரிழப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

உடல் எடையை குறைப்பதற்காக 6 மாதங்களாக தண்ணீரை மட்டுமே குடித்து வந்த கேரள பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

கேரளாவின் கண்ணூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஸ்ரீநந்தா என்ற பெண் உடல் எடையை குறைப்பதற்காக ஆன்லைன் தளங்கள் பரிந்துரையின் படி, கடந்த ஆறு மாதங்களாக உணவுகளை தவிர்த்து விட்டு, வெறும் தண்ணீர் மட்டும் குடித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் இரு வாரங்களுக்கு முன்பு கடும் பட்டினியால் அவதியடைந்து தீவிர சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Night
Day