உத்தரகாண்டில் நிறைவேறியது பொது சிவில் சட்டம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நாட்டிலேயே முதன்முறையாக "பொது சிவில் சட்ட மசோதா" உத்தரகாண்ட் சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. அனைத்து மதங்களின் தனிநபர் சட்டங்களுக்கும் பொதுவான நெறிமுறைகளைக் கொண்ட, பொது சிவில் சட்ட மசோதா உத்தராகன்ட் சட்டபேரவை கூட்ட தொடரில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதா குறித்து நேற்று சட்டபேரவையில் இரண்டாம் நாள் விவாதம் நடத்தப்பட்டது. அதனைதொடர்ந்து ஒருமனதாக பொது சிவில் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது. இதன்மூலம் நாட்டிலே முதல் முறையாக உத்தராகண்ட் சட்டப்பேரவையில் பொது சிவில் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டதை பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள், அம்மாநில முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமிக்கு இனிப்புகளை வழங்கி கொண்டாடினர்.

Night
Day