உத்தரகாண்ட் : பதிவு செய்யாமல் லிவிங் டூ கெதரில் வாழும் ஜோடிகளுக்கு 6 மாதம் சிறை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

உத்தரகாண்டில் முறையாக பதிவு செய்யாமல் லிவிங் டூ கெதரில் வாழும் ஜோடிகளுக்கு 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. உத்தரகாண்ட் சட்டப்பேரவையில் முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி நேற்று பொது சிவில் சட்ட மசோதாவை தாக்கல் செய்தார். அதற்கு, எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. அந்த மசோதாவின்படி, சார் பதிவாளர் அலுவலகத்தில் முறையாக பதிவு செய்யாமல் லிவிங் டூ கெதரில் வாழும் ஜோடிகளுக்கு 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், லிவிங் டூ கெதரில் தன்பாலின ஈர்பாலர்கள் ஈடுபட முடியாது என்றும், லிவிங்கில் இருக்கும் ஜோடிகள் குறித்து அவர்களது பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்படுமென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Night
Day