எழுத்தின் அளவு: அ+ அ- அ
உத்தரகாண்ட் மாநிலத்தில் சட்ட விரோதமாக கட்டப்பட்டுள்ளதாக கூறி மதரசா இடிக்கப்பட்டதால் கல்வீச்சு, வாகனங்கள் எரிப்பு என நகரமே கலவரக் காடானது. இதில் 4 பேர் உயிரிழந்த நிலையில், 100-க்கும் மேற்பட்ட போலீசார் காயமடைந்தனர்.
நாட்டிலேயே முதல் முறையாக பொதுசிவில் சட்ட மசோதா உத்தரகண்ட் மாநில சட்டமன்றத்தில் நேற்று முன்தினம் நிறைவேற்றப்பட்டது. இதனால் கடந்த 2 நாட்களாக நாடு முழுவதும் இம்மாநிலம்தான் பேசுபொருளாக இருந்தது. இந்தநிலையில் ஹல்த்வானியில் பன்புல்புரா காவல் நிலையம் அருகே இருந்த மதரசா மற்றும் நமாஸ் தளம் ஆகியவை ஆக்கிரமிப்பு கட்டங்கள் எனக் கூறிய நகராட்சி நிர்வாகம், அந்த இடத்திற்கு சீல் வைத்தது. இது அந்த பகுதி இஸ்லாமியர்களிடம் ஆத்திரத்தை ஏற்படுத்திய நிலையில் நேற்று அந்த கட்டிடங்கள் பொக்லைன் எந்திரங்கள் மூலம் இடிக்கப்பட்டன. இதையடுத்து அப்பகுதி மக்கள் கல்வீச்சில் ஈடுபட்டனர். இதில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் காயமடைந்த நிலையில், பதிலுக்கு காவல்துறையினரும் தடியடி நடத்தி மக்களை கலைத்தனர்.