உத்தரகாண்ட் : மதரஸா இடிப்பால் தொடரும் பதற்றம் - துணை ராணுவத்தை அனுப்ப கோரிக்கை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

உத்தரகாண்ட்டில் மதரஸா இடிப்பால் கலவரம் ஏற்பட்ட ஹல்த்வானி நகருக்கு கூடுதல் மத்திய படைகளை அனுப்புமாறு மத்திய அரசுக்கு மாநிர அரசு கோரிக்கை விடுத்துள்ளது. ஹல்த்வானி நகரில் அரசு நிலத்தில் சட்டவிரோதமாக கட்டப்பட்ட மதராஸாவை அரசு அதிகாரிகள் கடந்த வியாழக்கிழமை இடித்தனா். அப்போது நடைபெற்ற வன்முறையில் 6 போ் உயிரிழந்தனா். வாகனங்கள், வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டது. காவல்நிலையம் தாக்கப்பட்டதுடன் 100-க்கும் மேற்பட்ட காவலர்கள் கல்வீச்சில் காயமடைந்தனர்.  தொடா்ந்து பதற்றமான சூழல் நிலவுவதால் அங்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்தநிலையில் பாதுகாப்புக்காக கூடுதலாக 400  துணை ராணுவப் படையினரை அனுப்புமாறு மத்திய உள்துறையிடம் உத்தரகாண்ட் அரசு கேட்டுக் கொண்டுள்ளது.  

Night
Day