உத்தரபிரதேசம் : மதரஸா சட்டம் தொடர்பான உயர்நீதிமன்ற உத்தரவு நிறுத்திவைப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

உத்தர பிரதேசத்தில் மதரசா கல்விச் சட்டத்தை ரத்து செய்த அலகாபாத் உயர் நீதிமன்ற தீர்ப்பை உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது. 2004-ம் ஆண்டு முதல் உத்தர பிரதேசத்தில் மதரசா எனப்படும் இஸ்லாமிய மதக் கல்வியை கற்றுத் தரும் பள்ளிகளுக்கு என்று, மதரசா கல்வி வாரிய சட்டம் அமலில் உள்ளது. இந்த சட்டம் அரசியலமைப்புக்கு எதிரானதாக இருப்பதாக கூறி வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து இந்த சட்டத்தை அலகாபாத் உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. அலகாபாத் நீதிமன்றத்தில் உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு, தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்தது. அப்போது, அலகாபாத் நீதிமன்றத்தின் உத்தரவை நிறுத்தி வைத்துடன், மனு மீது மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டது.

Night
Day