உத்தரபிரதேசம்: கோயிலில் பக்தர்களின் கூட்டத்தால் இடிந்து விழுந்த பக்கவாட்டு சுவர்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

உத்தரப்பிரதேச மாநிலம் பர்சானா அருகே கோயிலின் பக்கவாட்டு சுவர் இடிந்து விழுந்ததில் 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். பர்சானாவில் பிரபலமான ராதா ராணி கோயிலில் ஹோலி பண்டிகைக்கு முந்தைய நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில், கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலை மோதியது. அப்போது நீண்ட நேரமாக கோயிலின் கதவு திறக்கப்படாததால் படிக்கட்டுகளில் பக்தர்கள் நின்று கொண்டிருந்தனர். ஒருகட்டத்தில் கூட்டம் அதிகரித்ததால் பக்கவாட்டு சுவர் இடிந்து விழுந்ததாகக் கூறப்படுகிறது. இதில் 22 பேர் காயமடைந்ததாகவும், அவர்களை உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Night
Day