இந்தியா
மகாராஷ்டிரா - மகாயுதி கூட்டணி நல்லாட்சிக்கு மீண்டும் கிடைத்த வெற்றி - பிரதமர் மோடி வாழ்த்து...
மகாராஷ்டிராவில் மகாயுதிக் கூட்டணியின் வெற்றி, வளர்ச்சி மற்றும் நல்லாட்ச?...
உத்தரப்பிரதேசத்தில் பல்கலைக்கழக தேர்வுத்தாளில் 'ஜெய் ஸ்ரீ ராம்' என எழுதிய மாணவர்களுக்கு மதிப்பெண்களை வாரி வழங்கிய 2 பேராசிரியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். ஜான்பூர் பகுதியில் இயங்கி வரும் வீர் பகதூர் சிங் புர்வன்சால் பல்கலைக்கழகத்தில், கடந்த வருடம் நடைபெற்ற செமஸ்டர் தேர்வின் முடிவுகள் வெளியானது. அதில், நன்கு படிக்கும் மாணவர்களை விட நான்கு பேருக்கு 50 சதவீதம் வரை மதிப்பெண் கிடைத்துள்ளது. இந்நிலையில், அந்த 4 மாணவர்களுமே விடைகளுக்கு பதிலாக ஜெய் ஸ்ரீராம் மற்றும் கிரிக்கெட் வீரர்களின் பெயர்களை எழுதி பக்கங்களை நிரப்பியது தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் அம்பலமாகியுள்ளது. இதுதொடர்பாக பல்கலைக்கழக துணைவேந்தர் விசாரணை நடத்தியதில், 2 பேராசிரியர்கள் லஞ்சம் பெற்றுக்கொண்டு மதிப்பெண் வழங்கியது தெரியவந்தது. இதையடுத்து வினய் வர்மா, ஆஷிஷ் குப்தா என்ற 2 பேராசிரியர்கள் பணியிடைநீக்கம் செய்யப்பட்டனர்.
மகாராஷ்டிராவில் மகாயுதிக் கூட்டணியின் வெற்றி, வளர்ச்சி மற்றும் நல்லாட்ச?...
தாய்லாந்து நாட்டிலிருந்து விமானத்தில் சென்னைக்கு கடத்தி வரப்பட்ட, 2 கோடி ?...