உத்தரபிரதேசம்: முக்தார் அன்சாரி இறுதி ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

உத்தரப்பிரதேசத்தில் உயிரிழந்த பிரபல தாதாவும், அரசியல் வாதியுமான முக்தார் அன்சாரியின் இறுதி ஊர்வலத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். சிறைக் கைதியான பிரபல தாதாவும் முன்னாள் எம்எல்ஏவுமான முக்தார் அன்சாரி உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். உணவில் விஷம் வைத்து அவர் கொல்லப்பட்டிருக்கலாம் என அவரது ஆதரவாளர்கள் குற்றம்சாட்டியதால் மாநிலம் முழுவதும் பதற்றம் நிலவியது. இதனையடுத்து, 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, துணை ராணுவம் குவிக்கப்பட்டது. இந்நிலையில், காஜிபூரில் முக்தார் அன்சாரியின் இறுதி ஊர்வலம் நடைபெற்றது. அதில், பொதுமக்கள் மற்றும் அவரது ஆதரவாளர்கள் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் லேசான தடியடி நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Night
Day