உத்தரபிரதேசம்: ரூ.9,800 கோடி மதிப்பிலான புதிய விமான திட்டங்களை தொடங்கி வைத்த பிரதமர்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

உத்தரபிரதேச மாநிலம் அசம்நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 15 புதிய விமான திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். நாட்டின் விமானப் போக்குவரத்து உள்கட்டமைப்பை மேம்படுத்தும் வகையில், 9 ஆயிரத்து 800 கோடி ரூபாய் மதிப்பில் டெல்லி உட்பட 12 விமான நிலையங்களின் புதிய முனைய கட்டிடங்களை திறந்து வைத்த பிரதமர், கடப்பா, ஹூப்பள்ளி உள்ளிட்ட விமான நிலையங்களின் புதிய முனைய கட்டிடங்களுக்கு அடிக்கல் நாட்டினார். பின்னர் பேசிய பிரதமர் மோடி, பின்தங்கிய பகுதிகளாகக் கருதப்பட்ட அசம்நகர் இன்று வளர்ச்சியின் புதிய அத்தியாயத்தை எழுதிக் கொண்டிருப்பதாகவும், அறிவிக்கப்பட்ட திட்டங்களை உரிய காலத்தில் நிறைவேற்றிய அரசின் சாதனைகளை, எதிர்க்கட்சியினர் தேர்தல் வித்தைகள் என குற்றம் சாட்டுவதை நிராகரிப்பதாகவும் கூறினார்.

Night
Day