உத்தரப்பிரதேசம் : உதவித்தொகைக்காக நடத்தி வைக்கப்பட்ட போலி திருமணங்கள் - 15 பேர் கைது

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

உத்தரப்பிரதேசத்தில் அரசின் திருமண உதவி தொகைக்காக மோசடியில் ஈடுபட்ட 2 அரசு அதிகாரிகள் உட்பட 15 பேரை போலீசார் கைது செய்தனர். 

பாலியா மாவட்டத்தில் கடந்த 25ம் தேதி வெகுஜன திருமணம் நடைபெற்றது. இதில் மணப்பெண்கள் மாலை அணிவிப்பது போன்ற வீடியோ வைரலான நிலையில், இந்த மோசடி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 568 ஜோடிகளுக்கு திருமணம் நடந்ததாக கூறப்படும் நிலையில், 500 ரூபாய் பணம் கொடுத்து மணமக்கள் அழைத்து வரப்பட்டது கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக 19 வயது இளைஞர் ஒருவர், திருமணத்தை வேடிக்கை பார்க்க சென்ற தனக்கு மணமகனாக வேடமிட பணம் வழங்கப்பட்டதாக தெரிவித்தார். இதுதொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையின் முடிவில், 2 அரசு அதிகாரிகள் உட்பட 15 பேர் கைது செய்யப்பட்டனர். 

Night
Day