உத்தரப்பிரதேசம்: கங்கை ஆற்றின் மீது கட்டப்பட்ட பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்து விபத்து

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

உத்தரப்பிரதேசத்தில் கங்கை ஆற்றில் மீது கட்டப்பட்ட பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. புலந்த்ஷாஹரில் உள்ள கஜ்ரௌலா கிராமத்தில் இருந்து அம்ரோஹாவில் உள்ள விராம்பூர் கிராமம் வரை 83 கோடி ரூபாய் செலவில் பாலம் கட்டப்பட்டு வருகிறது. இந்த பாலத்தின் ஒரு பகுதி நேற்றிரவு இடிந்து விழுந்தது. இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீசார் மற்றும் தீயணைப்புத்துறையினர் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும் இந்த விபத்தில் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை என கூறப்படுகிறது. தரம் குறைந்த கட்டுமானப் பொருட்களை பயன்படுத்தியதால் இந்த விபத்து ஏற்பட்டதாக பொதுமக்கள் குற்றம்சாட்டினர்.

Night
Day