உத்திரப்பிரதேசம்: ஜிம்மில் உடற்பயிற்சி செய்துகொண்டிருந்த நபர் மயங்கி விழுந்து உயிரிழப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் ஜிம்மில் ஒர்க் அவுட் செய்துகொண்டிருந்த நபர், மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது. வாரணாசில் உள்ள ஜிம்மில் 32 வயதான நபர் ஒருவர் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தார். அப்போது அவருக்கு உடல் சோர்ந்து காணப்பட்டதால் தலையில் கையில் வைத்தப்படியே அமர்ந்திருந்தார். அப்போது, திடீரென மயங்கி கீழே விழுந்த அவரை, அருகிலிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் அந்த நபர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இந்நிலையில், பயிற்சியின்போது அந்த நபர் மயங்கி விழும் வீடியோ காட்சிகள் வெளியாகி காண்போரை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

Night
Day