உலகம் சுற்றுவதைத் தவிர்த்து நாட்டு மக்களுக்கு ஆற்றிய பணிகள் என்ன

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பிரம்மாண்ட நிகழ்ச்சிகளை நடத்துவது, உலகம் முழுவதும் சுற்றி வருவதைத் தவிர்த்து நாட்டு மக்களுக்கு பிரதமா் மோடி செய்த பணிகள் என்ன என காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். குஜராத்தின் தரம்பூரில் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய அவர், தான் கேட்ட கேள்வியை மக்களும் தற்போது கேட்பதால் பிரதமர் பதற்றமடைந்துள்ளதாக குறிப்பிட்டார். அதனால்தான் மக்களை திசைதிருப்ப இந்து-முஸ்லிம் பிரச்னையை எழுப்புவதாகவும் குற்றம் சாட்டினார். மோடி மட்டுமே நேர்மையானவர் போல் பாஜகவினர் சித்தரித்து வருவதாக கூறிய பிரியங்கா காந்தி, ஆனால் பிரதமர் பொய் மட்டுமே பேசுவதாக சாடினார்.

Night
Day