உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் பட்டியலில் இந்தியாவிற்கு பின்னடைவு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் கொண்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா 85-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இந்த பட்டியலில் இந்தியா 84-வது இடம்பிடித்திருந்தது. இந்தியாவில் இருந்து விசா இல்லாமல் செல்லக்கூடிய நாடுகளின் எண்ணிக்கை 60-ல் இருந்து 62-ஆக அதிகரித்த நிலையிலும், தரவரிசை பட்டியலில் ஒரு இடம் பின்தங்கியுள்ளது. இந்தியாவை விட மிகச்சிறிய பரப்பளவு கொண்ட மாலத்தீவு இந்த பட்டியலில் 58-வது இடம் பிடிததுள்ளது. ஹென்லே பாஸ்போர்ட் இன்டெக்ஸ் அமைப்பு வெளியிட்டுள்ள உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் பட்டியலில் பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், சிங்கப்பூர் ஸ்பெயின் ஆகிய நாடுகள் முதலிடத்தைப் பிடித்துள்ளது. 

Night
Day